search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கோர்ட் மனு"

    பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் இன்று மனு செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோதமான பணபரிமாற்றம் நடந்துள்ளதாக பொருளாதார அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.



    இவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் கடந்த மாதம் முதல் தேதி ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியபோது அனுமதி பெறாமல் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்திருந்தது.

    இந்நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி ரோவ்ஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா கோர்ட்டில் இன்று மனு செய்துள்ளார்.

    ராபர்ட் வதேராவின் பாதுகாப்பு கருதி அவர் எந்த நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற விபரத்தை மூன்றாம் நபர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என சிறப்பு நீதிபதி அரவிந்த் குமாரிடம் ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் இந்த மனுவின்மீது வரும் 24-ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.
    ×